கோயில் பூசாரிகளுக்கு தாலுகா வாரியாக புத்தொளி பயிற்சி

நாமக்கல், நவ.26:கோயில் பூசாரிகள் நல சங்க மாநில தலைவர் வாசு, இந்து சமய அறநிலையத்துறை   முதன்மை செயலாளருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: இந்துசமய  அறநிலையத்துறை மூலம், தமிழகம் முழுவதும் மண்டலந்தோறும் நடத்தப்பட்டு வந்த  புத்தொளி பயிற்சி முகாமில், பூசாரிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.  இதுதொடர்பான வழக்கை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து, அனைத்து  மண்டலங்களிலும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள் மற்றும் ஓதுவார்களுக்கு  புத்தொளி பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.

ஆனால், பூசாரிகளுக்கு இதில்  வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

தற்போது தமிழக பூசாரிகளின் நலன் கருதி, பூசாரிகளுக்கு புத்தொளி பயிற்சி  வழங்க முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. ஜனவரி மாதம் பூசாரிகளுக்கு புத்தொளி பயிற்சி நடத்த  திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சி வகுப்பு, மாவட்ட தலைநகரங்களில் மட்டும் நடத்தப்படாமல், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும், தாலுகா  வாரியாக நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம் 48 நாட்கள் பயிற்சி அளிக்க  வேண்டும். இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: