பாபநாசம் ரயில் நிலையத்தில் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் நின்று செல்ல நடவடிக்கை

பாபநாசம், நவ. 22: தென்னக ரயில்வே தலைமை பொது (து) மேலாளர் மிஸ்ராவை சந்தித்து பாபநாசம் ரயில் பயணிகள் சங்க செயலாளர் சரவணன் மனு அளித்தார். அதில் பாபநாசம் தாலுகா தலைநகரமாகும். இந்த நகரிலுள்ள ரயில் நிலையத்தால் ஏராளமான பொதுமக்கள் பயன்பட்டு வருகின்றனர்.

தற்போது பாபநாசம் ரயில் நிலையத்தில் சோழன், உழவன், திருச்செந்தூர், மைசூர், திருப்பதி- ராமேஸ்வரம் மற்றும் கோவை ஜன சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்கள் உட்பட 8க்கும் மேற்பட்ட ரயில்கள், 10க்கும் மேற்பட்ட பாசஞ்சர் ரயில்களும் நின்று செல்கின்றன. இதன்மூலம் பாபநாசம் ரயில் நிலையத்துக்கு மாதத்துக்கு ரூ.11 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைக்கிறது. எனவே பாபநாசம் ரயில் நிலையத்தில் தாம்பரம்- நாகர்கோவில் அந்தியோதயா மற்றும் ராமேஸ்வரம்- சென்னை விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertising
Advertising

Related Stories: