மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்ப்பு முகாம்

வேப்பூர், நவ. 22: வேப்பூர் தாலுகா அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர்கள் திட்டக்குடி ரவிச்சந்திரன், விருத்தாசலம் செந்தில்குமார், வேப்பூர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   முகாமில், மாற்று திறனாளிகளுக்கு முதியோர் உதவித் தொகை, இலவச கறவை மாடுகள் உட்பட பல  கோரிக்கைகளை மனுக்களாக மாற்றுத்திறனாளிகள் வழங்கினர். மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக சார் ஆட்சியர் பிரவீன்குமார் தெரிவித்தார்.  

முகாமில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் சுந்தரவடிவேலு, சையத் சர்தார், வேப்பூர் துணை வட்டாட்சியர் பாலமுருகன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர்  சாந்தி, வருவாய் ஆய்வாளர் வேப்பூர் பழனி, சிறுபாக்கம் குமார், விஏஓக்கள் ராஜாமணி, அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: