மானிய விலையில் குறுகிய கால விதைநெல் விநியோகம்

பாபநாசம், நவ. 20: அம்மாப்பேட்டை சுற்றுவட்டார பகுதியில் உள்ள விரிவாக்க மையங்களில் குறுகியகால விதைநெல் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்மாப்பேட்டை வேளாண்மை உதவி இயக்குனர் சுஜாதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: அம்மாப்பேட்டை வட்டாரத்தில் தற்போது பின்பட்ட தாளடி மற்றும் முன்பட்ட அறுவடைக்கு ஏற்ற கோ.ஆர் 51 குறுகியகால சான்று விதை நெல் அம்மாப்பேட்டை, சாலியமங்கலம், திருக்கருக்காவூர், மெலட்டூர் உள்ளிட்ட விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விதை கிராம திட்டத்தின்கீழ் மானியத்தில் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே குறுகிய கால விதை நெல் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் ஆதார் அட்டையுடன் சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மையத்துக்கு சென்று பெற்று கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: