டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி வழங்க வேண்டும் பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்

கும்பகோணம், நவ. 20: டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி வழங்க வேண்டுமென கும்பகோணத்தில நடந்த டாஸ்மாக் மாற்றுத்திறனாளி பணியாளர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கும்பகோணத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் மாற்றுத்திறனாளி பணியாளர் சங்க தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில பொது செயலாளர் அரியகுமார் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் வரவேற்றார். திருச்சி மண்டல பொருளாளர் அன்பழகன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்ணன், மாநில பொருளாளர் ஆறுமுகம், நாகை மாவட்ட பொருளாளர் சேகர், தஞ்சை மாவட்ட தலைவர் கருணாநிதி சிறப்புரையாற்றினர்.

Advertising
Advertising

கூட்டத்தில் தமிழக அரசு நிறுவனங்களில் 2 ஆண்டுகளுக்கு மேல் மாற்றுத்திறனாளிகள் பணிபுரிந்தால் அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கலாம் என்ற அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும். அரசின் மற்ற துறைகளில் வழங்குவதை போல டாஸ்மாக்கில் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு பயணப்படி வழங்க வேண்டும். பணி இடமாறுதலின்போது மாற்றுத்திறனாளிகள் வசிப்பிடத்துக்கு அருகில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நிபந்தனையின்றி பணிமாறுதல் செய்ய வேண்டும். நிரப்பப்படாமல் உள்ள இளநிலை உதவியாளர் பதவிக்கு கல்வி தகுதியில் அடிப்படை என்ற விதியை தளர்த்தி 500 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தஞ்சை மாவட்ட துணை செயலாளர் விஜய் ஆனந்த்ராஜ் நன்றி கூறினார்.

Related Stories: