கழிவறை தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

முசிறி, நவ.20: முசிறியில் தனியார் திருமண மண்டபத்தில் முசிறி பேரூராட்சி அலுவலகம் சார்பில் உலக கழிவறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருச்சி மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் முத்துக்குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். தொண்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் அபிராமி சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட சட்டவிதிகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் வழிமுறைகள், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் முழுமையான சுகாதாரத்தை ஏற்படுத்துவதற்கு செயல்படுத்தப்பட்ட யுக்திகள், பேரூராட்சி பகுதிகளை சுத்தமாக பராமரிக்க பணியாளர்கள் மேற்கொள்ளும் பங்களிப்பு குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. திடக்கழிவு மேலா ண்மை திட்டம் மற்றும் அனைத்து அரசு திட்டங்களையும் திறம்பட செயல்படுத்த உதவும் துப்புரவு பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இறுதியில் தலைமை எழுத்தர் ஜான் ஸ்டான்லி சேவியர் நன்றி கூறினார்.

Related Stories:

>