மத்திய, மாநில அரசை கண்டித்து சிஐடியு பிரசார இயக்கம் தொடக்கம்

ஆவடி, நவ.20:  மத்திய மாநில அரசுகளின் மக்கள் விரோத தொழிலாளர் போக்கை கண்டித்து சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய பிரசார இயக்கம் மேற்கொள்ள போவதாக அறிவித்தது. இதனை அடுத்து, நேற்று காலை வடசென்னை மாவட்ட குழு சார்பில் ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து பிரசார இயக்கம் நடந்தது. இதற்கு, ஆவடி பணிமனை பொருளாளர் ரவிசங்கர் தலைமை தாங்கினார். பிரசார பயணக்குழு வேனை மாவட்டத் தலைவர் எஸ்.கே.மகேந்திரன் துவக்கி வைத்தார்.

பிரசார இயக்கத்தை துவக்கி வைத்து மாநில செயலாளர் சி.திருவேட்டை பேசுகையில், கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு தொழிலாளர் நல சட்டங்களை திருத்தி அமைக்கிறது. ஆண்டுக்கு 2கோடி பேருக்கு வேலை அளிப்போம் என கூறிய மத்திய அரசு காலி பணியிடங்களை நிரப்ப மறுக்கிறது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களையும் தனியார்வசம் ஒப்படைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.  எனவே தொழிலாளர்கள் என்ற அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைந்து மத்திய, மாநில அரசுகளின் தொழிலாளர் விரோத எதிர்க்க வேண்டும் என்றார்.

அம்பத்தூரில் மோட்டார் வாகன சங்க பகுதி தலைவர் ஏ.ராயப்பன் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில்,  அரசு போக்குவரத்து கழக சம்மேளன மாநில பொருளாளர் சசிகுமார், சிஐடியு மாவட்ட துணைத் தலைவர்கள் ஆர்.ஜெயராமன், ஏ.ஜி.காசிநாதன், லெனின்சுந்தர், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு  ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை, மாவட்ட நிர்வாகிகள் ஜீவானந்தம்,பூபாலன், ராஜன், சடையன்,   சிஐடியு மாநில செயலாளர் ரவிச்சந்திரன், பால்சாமி, பி.என்.உண்ணி, சி.சுந்தர்ராஜன், என்.கணேசன், சேட்டு, செங்கொடி சங்க மண்டல செயலாளர் குப்புசாமி, பொன்னுசாமி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: