சமூக விரோத செயலை தடுக்க பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க வலியுறுத்தல்

தொண்டி, நவ.19:  நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது. மேலும் பள்ளி வளாகத்தில் சமுக விரோத செயல்களும் நடைபெறுவதால் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகேயுள்ள நம்புதாளை அரசு உயர் நிலைப்பள்ளி கடந்த சில வருடங்களுக்கு முன்பு புதிய கட்டிடத்தில் செயல்பட ஆரம்பித்தது. கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டி இப்பள்ளி அமைந்து உள்ளது. மாணவர்களுக்கு எவ்வித பாதகாப்பும் இல்லாத நிலையில் கட்டிடம் உள்ளது. கடந்த சில வருடங்களாக சுற்றுச்சுவர் இல்லாமல் இருப்பது ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாக உள்ளது.

மேலும் இரவு நேரத்தில் பள்ளி வனாகத்தில் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட செயல்களில் சிலர் ஈடுபடுகின்றனர். அதனால் மாவட்ட அதிகாரிகள் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து சுற்றுச்சுவர் கட்ட வேண்டும் என்றனர். நம்புதாளை செய்யது நெய்னா கூறியது, பள்ளிகூடத்திற்கு சுற்றுச்சுவர் கட்டித்தர கோரி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ உட்பட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு கொடுத்து விட்டோம் ஆனாலும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மாணவர்களின் நலன் கருதி உடன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும என்றார்.

Related Stories: