குடிசை வீடு தீயில் எரிந்து சேதம்

பவானி, நவ. 19:  அம்மாபேட்டை அருகேயுள்ள ஊமாரெட்டியூர் பந்தல்கரடு பகுதியை சேர்ந்தவர் மாதம்மாள் (70). கூலி வேலை செய்து வருகிறார். இவருடன் குடிசை வீட்டில் மகள் ரேவதி, பேத்தி கனிமொழி ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, மூதாட்டி மாதம்மாள் எழுந்து சமையல் செய்ய சமையல் எரிவாயு அடுப்பை பற்ற வைக்க முயன்றுள்ளார்.

அப்போது தீப்பெட்டி இல்லாததால், தனது பேத்தி கனிமொழியை எழுப்பிக் கேட்டுள்ளார். சிறுமி தீப்பெட்டியை கொடுக்க மூதாட்டி அடுப்பைப் பற்றவைக்க முயன்றபோது, ஏற்கனவே காஸ் கசிந்திருந்ததால் எதிர்பாராமல் தீப்பிடித்தது. இதில் குடிசையின் கூரையில் தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இதை பார்த்த சிறுமி கனிமொழி, பாட்டி மற்றும் தாயையும்  இழுத்து கொண்டு வெளியே ஓடி வந்ததால், மூவரும் உயர் தப்பினர். இவ்விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறியது. தகவலறிந்த அந்தியூர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். இதில், வீட்டிலிருந்த உடமைகள் அனைத்தும் எரிந்து சேதமானது.

Related Stories:

>