முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 60 ஏழை மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை

நாகர்கோவில், நவ.19 : நாகர்கோவிலில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் 60 ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகையை முதன்மை கல்வி அதிகாரி வழங்கினார்.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ள முதுகலை ஆசிரியர்கள் மற்றும் மேல்நிலை பள்ளி புதிய பாட திட்ட குழுவில் இணைந்து பணியாற்றிய குமரி மாவட்ட முதுகலை ஆசிரியர்களை பாராட்டும் நிகழ்வு மற்றும் நன்கு கற்கும் 60 ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா ஆகியவை நாகர்கோவிலில் டதி பெண்கள் மேல்நிலை பள்ளியில் நடந்தது.தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ராஜூ தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வினித் வரவேற்றார். மாநில துணை தலைவர் ஜாண் இக்னேஷியஸ், ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் ஜேம்ஸ் முன்னிலை வகித்தனர். சங்க மாநில பொது செயலாளர் மனோகரன், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளிவேலு ஆகியோர் பேசினர். புதிய பாடதிட்ட குழுவில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றவர்களை பாராட்டியும், ஏழை மாணவ மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கியும் கல்வியாளர் ஆயிஷா நடராஜன் பேசினார். மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.

Related Stories: