சேலத்தில் துணிகரம்: மளிகை கடையில் ₹20ஆயிரம் கொள்ளை

சேலம், நவ. 13: சேலம் தாதகாப்பட்டி அம்பாள் ஏரிரோடு பகுதியை சேர்ந்தவர் சந்திரா (40). இவர் வீட்டிற்கு அருகிலேயே சிறிய மளிகைகடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி இவர் வியாபாரத்தை முடித்து விட்டு இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். நேற்று முன்தினம் கடையை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த ₹20 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இது குறித்து சந்திரா அன்னதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், தாதகாப்பட்டி அண்ணாநகர் பகுதியை சேர்ந்த சக்திவேல் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருடியது தெரியவந்தது. இதனையடுத்து, அன்னதானப்பட்டி போலீசார் சக்திவேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories:

>