குமரி கோயில்களில் அன்னாபிஷேகம்

கன்னியாகுமரி, நவ.13: கன்னியாகுமரி ரயில் நிலையம் செல்லும் வழியில் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம், அபிஷேகம், தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. காலை 10 மணிக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப்பட்ட அன்னம் படைக்கப்பட்டு சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர். இதேபோல் வடசேரி சோழராஜா கோயில், இருளப்பபுரம் பசுபதீஸ்வரர் கோயில் உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும்  அன்னாபிஷேகம், உச்சிகால பூஜை, அலங்கார தீபாராதனை மற்றும் பூஜைகள் நடந்தது.

Related Stories: