கும்பகோணத்தில் கருணாநிதி உருவ சிலை அமைக்கப்படும்

கும்பகோணம், நவ.12: தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது என தஞ்சை வடக்கு மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.தஞ்சை வடக்கு மாவட்ட பொது உறுப்பினர் கூட்டம் வரும் 12ம் தேதி, பாபநாசத்திலுள்ள தளபதி திருமண மண்டபத்தில் அவைத் தலைவர் தண்டபாணி தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், சென்னையில் நடைபெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டத்தின் முடிவுகளை நிறைவேற்றுவது, கும்பகோணத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் உருவ சிலையை அமைப்பது, வெற்றிபெற்ற எம்பிக்களுக்கு பாராட்டு வழங்குவது, விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவது குறித்தும், இளைஞரணி, மகளிரணி உறுப்பினர்களை அதிகம் சேர்ப்பது. அனைத்து அணி செயல்பாடுகள் ஆய்வு உள்ளிட்டவைகள் பற்றி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

எனவே இக்கூட்டத்திற்கு முன்னாள் இன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், அனைத்து பிரிவு அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தலைமை செயற்குழு, பொது குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.இதேபோல் வரும் 12ம்தேதி மதியம் அதே மண்டபத்தில் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி கூட்டம் மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமையில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு நகர, ஒன்றிய, பேரூர் இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி தெரிவித்துள்ளார்.

Related Stories:

>