துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை கொள்ளை

துறையூர், நவ.8: துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 10 பவுன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.துறையூரை அருகே வெங்கடாசலபுரம் கிராமத்திலுள்ள வெள்ளாள தெருவை சேர்ந்தவர் கமலம்(68). இவருக்கு 2 பிள்ளைகள் உள்ளன. கணவனை இழந்த கமலம் தனியாக குடியிருந்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே தெருவில் இருக்கும் உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு மதியம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது அருகில் இருந்த பீரோவின் சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதில் இருந்து 10 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து ெசன்றது தெரியவந்தது. இதுகுறித்து கமலம் உப்பிலியாபுரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: