சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி 46 பேர் திருச்சி முகாம் சிறையில் உண்ணாவிரதம்

திருச்சி, நவ. 8: சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி திருச்சி முகாம் சிறையில் உள்ள 46 பேர் உண்ணாவிரதம் நேற்று முதல் உண்ணாவிரத்தை துவக்கியுள்ளனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் முகாம் சிறை உள்ளது. இந்த முகாம் சிறையில் இலங்கை தமிழர்கள் 37 பேர், வங்கதேசம் 30 பேர், சீனா 1, பல்கேரியா 1, ரஷ்யா 1, தென்னாப்பிரிக்கா 1, ஜெர்மன் 1 என மொத்தம் 72 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் போலி பாஸ்ேபார்ட் வழக்கில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில் தங்கள் மீதான வழக்கை விரைந்து முடித்து சொந்த நாட்டுக்கு அனுப்ப கோரி 22 இலங்கை தமிழர், 22 வங்கதேசம், 1 சீனா, 1 பல்கேரியா ஆகிய நாட்டை சேர்ந்த 46 பேர் நேற்று முதல் முகாம் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதனால் சிறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: