பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது

திருவையாறு, நவ. 8: திருவையாறு அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.திருவையாறு அருகே வசிப்பவர் சுகன்யா (16). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). திருவையாறில் உள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவரை காணவில்லை.இதுகுறித்து திருவையாறு போலீசில் சுகன்யாவின் தந்தை புகார் செய்தார். இந்நிலையில் திருவையாறு அருகே ஒரு கிராமத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த பள்ளி மாணவியை கண்டுபிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் அதே பகுதியில் குடியிருந்து வரும் திருமணமான ஒரு வாலிபருடன் கடந்த 3 ஆண்டுகளாக பழகி வந்ததாகவும், சமீபத்தில் தஞ்சாவூரில் வேலை பார்க்கும் கம்பெனி அருகே தனியாக வீடு வாடகைக்கு எடுத்து அவருடன் தங்கி குடும்பம் நடத்தியதாகவும் தெரிவித்தார்.மேலும் தன்னை காணாமல் பெற்றோர் தேடுவதை அறிந்து தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்ததாக கூறினார். இதையடுத்து வாலிபரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertising
Advertising

Related Stories: