திருச்சி மாநகராட்சி புதிய ஆணையர் பொறுப்பேற்பு

திருச்சி, நவ.7: திருச்சி மாநகராட்சி புதிய ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார்.வேலூர் மாநகராட்சியில் பணியாற்றிய சிவசுப்பிரமணியனை பணி மாறுதல் செய்து அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று (6ம் தேதி) காலை திருச்சி மாநகராட்சி ஆணையராக சிவசுப்பிரமணியன் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற ஆணையர் சிவசுப்பிரமணியன் திருச்சி மாநகர மக்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதிலும், பொதுமக்களின் குறைகளை தீர்க்கவும் முன்னுரிமை கொடுத்து பணியாற்றுவேன் என தெரிவித்துள்ளார். இந்த பதவி ஏற்பு விழாவில் நகர் நல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: