வானராங்குடியில் சிறப்பு குறைதீர் முகாம் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் காயம்

கும்பகோணம், நவ. 7: கும்பகோணம் அருகே மாடு முட்டி சாலையில் நடந்து சென்றவர் காயமடைந்தார்.கும்பகோணம் பகுதி சாலைகளில் பொதுமக்கள், போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள் சுற்றி திரிகின்றன. இதுகுறித்து தெரிந்தும் நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் கும்பகோணம் யாதவ தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி வெங்கடேசன் (50) சாலையில் நடந்து சென்றார். அப்போது சாலையில் 20க்கும் மேற்பட்ட மாடுகள் நின்று ஒன்றோடு ஒன்று முட்டி கொண்டிருந்தன. அப்போது அங்கு வந்த வெங்கடேசனை மாடுகள் முட்டியது. இதில் கழுத்து, தலையில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.கும்பகோணம், தாராசுரம் பகுதியில் முக்கிய வீதிகளில் கால்நடைகள் சுற்றி திரிகின்றன. அவற்றை பிடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நகராட்சி கண்டு கொள்ளாததால் உயிர்பலி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியாவது கால்நடைகளை நகராட்சி அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுெமன பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related Stories: