தஞ்சாவூரில் உலக ரெட் கிராஸ் தினம்

தஞ்சாவூர், மே9: இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி தஞ்சாவூர் மாவட்ட கிளையின் சார்பில் உலக ரெட்கிராஸ் தினத்தை முன்னிட்டு மாவட்ட அலுவலகத்தில் நிறுவனர் ஹென்றி டுனாண்ட் திருஉருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்திலிருந்து விடுபட இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஒரு மாத காலம் இயங்கும் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது. நீர்மோர், பானகம் எலுமிச்சை புதினா ஜூஸ், தர்பூசணி ஜூஸ் ஆகியவற்றில் ஒன்று நாள்தோறும் காலை 11 மணி முதல் 12 மணி வரை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நிகழ்ச்சியில் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி மாவட்ட சேர்மன் டாக்டர். வரதராஜன், பொருளாளர் சேக் நாசர், யூத் ரெட்கிராஸ் ஆலோசகர் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 

 

The post தஞ்சாவூரில் உலக ரெட் கிராஸ் தினம் appeared first on Dinakaran.

Related Stories: