செங்குணம் கிராமத்தில் குழந்தை பாதுகாப்புக்குழு கூட்டம்

பெரம்பலூர்,நவ.7:செங்குணம் கிராமத்தில் கிராம அளவிலான குழந்தைப் பாது காப்புக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறையின், குழந்தை பாதுகாப்பு அலகு (ஒருங்கி ணைந்த குழந்தை பாதுகாப்புத் திட்டம்) சார்பில் கிராம அளவிலான குழந்தை பாது காப்புக்குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவில் ஊராட்சி மன்ற தலைவர், கிராம நிர்வாக அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியர், அங்கன்வாடி மையப் பணி யாளர்கள், கிராம செவிலியர், பள்ளி மாணவ பிரதிநிதிகள், சமூக ஆர்வலர் தன் னார்வலர் ஆகியோர் உறுப் பினராக இடம் பெற்றுள்ள னர். ஒவ்வொரு ஊராட்சியிலும் 3 மாதத்திற்கு ஒருமுறை இக்குழு சார்பில் கூட்டம் நடைபெற வேண்டும். இதே போல் குழந்தை பாதுகாப்பு குழுவானது வட்டார அள விலும் மாவட்ட அளவிலும் செயல்பட்டு வருகிறது.

இக் குழு கூட்டத்தில் குழந்தை திருமணம், குழந்தை கடத் தல், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகளுக்கு ஏற்ப டும் பாலியல் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண ஆலோசனைகள் வழங்கப் படும். இதன்படி நேற்று பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்குணம் ஊராட்சியில் கிராம அளவி லான குழந்தை பாதுகாப்புகுழு கூட்டம் செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது.இக்கூ ட்டத்திற்கு தலைமை ஆசிரியர் டெய்சிராணி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆலோசகர் மகேஸ்வரி முன்னிலை வகித்தார். குழந்தை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு பல தகவல்களும் ஆலோச னைகளும் வழங்கப்பட்டும் குறும்படம் காண்பித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் அர்ச்சுனன், அங்கன்வாடி பணியாளர்கள் வசந்தா, மரிய அந்தோனியம்மாள், சத்துணவு அமைப்பாளர் சுதா, மாணவ பிரதிநிதிகள் சேமலா, விஜயலெக்ஷ்மி, சமூக ஆர்வலர் குமார் அய்யாவு உள்பட ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Related Stories: