தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்

மதுரை, நவ. 7: தனியார் நிறுவன வேலைவாய்ப்பு முகாம், மதுரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை (8ம் தேதி) நடக்கிறது. இது குறித்து மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய துணை இயக்குநர் மகாலட்சுமி வெளியிட்டுள்ள அறிக்கை: மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தொழில் மற்றும் செயல் வேலைவாய்ப்பு கிளை அலுவலகம் ஆகியவை சார்பில் நாளை (நவ.8) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.

Advertising
Advertising

இம்முகாமில் பிரபல தனியார் முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, ஆட்களை தேர்வு செய்கின்றன. 10ம் வகுப்பு முதல் முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள், ஐடிஐ. டிப்ளமோ முடித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளும் முகாமில் பங்கேற்கலாம். முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கல்விச்சான்றிதழ்கள், ரேஷன் கார்டு, ஆதார் அட்டை மற்றும் புகைப்படத்துடன் நாளை (நவ.8) காலை 10 மணியளவில் மதுரை கோ.புதூரில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும். தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதால், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எந்த விதத்திலும் பாதிக்காது.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: