கண்மாயை இரண்டாக பிரிக்கக்கோரிய வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு

மதுரை, நவ. 6: கண்மாயை இரண்டாக பிரிக்கக் கோரிய வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

 மதுரை மாவட்டம், களிமங்களத்தை சேர்ந்த முகமது அப்துல் காதர், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: குன்னத்தூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட கண்மாய்க்கு, பெரியார்-வைகை பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் வருகிறது. இக்கண்மாய் மூலம் குன்னத்தூர், களிமங்கலம் பகுதிகளில் விவசாயம் நடக்கிறது. கண்மாய் மூலம் கிடைக்கும் வருவாய் இரு பஞ்சாயத்துகளால் பிரித்துக் கொள்ள, கடந்த 1986ல் நடந்த கிராம கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

களிமங்களம் கிராமத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. எனவே, குன்னத்தூர் கண்மாயை இரண்டாக பிரித்து களிமங்களம் கிராம விவசாய பாசனத்திற்கும், கண்மாய் மூலம் கிடைக்கும் வருவாய் கிடைக்கவும், உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஆர்.தாரணி ஆகியோர் மதுரை கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை டிச.9க்கு தள்ளி வைத்தனர்.

Related Stories: