அம்பத்தூர், அக். 25: அம்பத்தூர் தொழிற்பேட்டையில் தனியார் நிறுவன ஊழியரை இரும்பு ராடால் தாக்கி செல்போன் பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.அம்பத்தூர் அடுத்த முகப்பேர் ரெட்டிபாளையத்தில் வசிப்பவர் மணிபாலன் (26). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள பிரபல ஸ்வீட் கடைக்கு இனிப்பு தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் அதிகாலை 5 மணிக்கு மணிபாலன் வீட்டில் இருந்து வேலைக்கு புறப்பட்டார். அம்பத்தூர் தொழிற்பேட்டை, வாவின் சந்திப்பு அருகே நடந்து வந்தபோது பைக்கில் வந்த 3 பேர் இவரை வழிமறித்து பாக்கெட்டில் இருந்த செல்போனை கேட்டுள்ளனர்.