கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

திருச்செங்கோடு, அக்.25: திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் ஓர் அங்கமான கிருஷ்ணா மற்றும் கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரிகளில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மற்றும் செயலாளர் கருணாநிதி, முகாம் துவக்க விழாவிற்கு தலைமை வகித்தார். கிருஷ்ணா மகளிர்  கல்வியியல் கல்லூரி முதல்வர  சித்ரா வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக, மாணிக்கபாளையம் அரசு மருத்துவமனையிலிருந்து வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் கருணாகரன், டாக்டர் சக்திகுமார், சித்த மருத்துவர் அமுதலட்சுமி, சுகாதார ஆய்வாளர்கள் சரவணமூர்த்தி மற்றும் பாலுசாமி ஆகியோர் பங்கேற்று, ஆசிரியர் பயிற்சி மாணவிகளுக்கு டெங்கு பரவும் முறைகள், அதை தடுப்பதற்கான வழிமுறைகள் மற்றும் உரிய மருத்துவம் பற்றி கூறினர். முகாமிற்கான ஏற்பாடுகளை, உதவி பேராசிரியர்கள் சண்முகநதி, தர்மராஜன் மற்றும் ராம்குமார் செய்திருந்தனர். கிருஷ்ணா மகளிர் கல்வியியல் கல்லூரி முதல்வர் சசிபிரியா நன்றி கூறினார். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Related Stories: