சாயல்குடி. அக். 23: பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவிற்கு பசும்பொன் வந்து செல்லும் உள் மாவட்டத்தினருக்கான வழித்தடங்களை கலெக்டர் வீரராகவராவ் அறிவித்துள்ளார்.கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை விழா வரும் அக்.30ந் தேதி கொண்டாடப்படுகிறது. அவரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளின் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் வந்துசெல்கின்றனர். ராமநாதபுரம் உள்மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலிருந்து வந்து செல்வோருக்கு வழித்தடங்களை கலெக்டர் வீரராகவராவ் நேற்று அறிவித்துள்ளார்.ராமேஸ்வரம் பகுதியிலிருந்து வாகனங்களில் வருவோர் பட்டிணம்காத்தான் இசிஆர், பேராவூர் சந்திப்பு, அச்சுந்தன்வயல், சத்திரக்குடி, பரமக்குடி, கமுதக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். தேவிபட்டிணம் பகுதிகளிலிருந்து வாகனங்களில் வருவோர் கோப்பேரிமடம், பேரவூர் சந்திப்பு, அச்சுந்தன்வயல், சத்திரக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். கீழக்கரை பகுதிகளிலிருந்து வாகனங்களில் வருவோர் பட்டிணம்காத்தன் இசிஆர் வழியாக சத்திரக்குடி, பரமக்குடி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன். சிக்கல் பகுதியினர் சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன், கன்னிராஜபுரம், செவல்பட்டி பகுதியினர் சாயல்குடி, கோவிலாங்குளம், கமுதி, பசும்பொன். கடலாடி பகுதியினர் முதுகுளத்தூர், பேரையூர், கமுதி, பசும்பொன்.