இந்தியன் ஆயில் விற்பனை திட்டத்தில் கரூர் வாடிக்கையாளருக்கு டாடா ஏசி வாகனம்

கரூர், அக்.18: இந்தியன் ஆயில் விற்பனை திட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முறையாக கரூர் வாடிக்கையாளருக்கு டாடா ஏசி வாகனம் வழங்கப்பட்டது.இந்தியன் ஆயில் நிறுவனம், டீசல் வணிக வாகனங்களுக்கான டீசல் ப்ரோ டிரக் ஜீட்டோ, விற்பனை பிரசாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 50 லிட்டர் மற்றும் அதற்கு மேல் டீசல் நிரப்புவோர், எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டிய நம்பர் 99114 10000. செப்டம்பர் 10 முதல் டிசம்பர் 8 வரை இத்திட்டம் நடைமுறையில் உள்ளது. திட்ட காலத்தில் ஒவ்வொரு மாற்று நாளிலும், ஒரு டாடா ஏஸ் தங்கம் மினி டிரக் வாகனம் வழங்கப்படுகிறது. மொத்தம் 45 மினி டிரக்கில், முதல் முறையாக கரூரில் இத்திட்டத்தில் வெற்றி பெற்ற பொன்னுசாமி என்பவருக்கு மினி டிரக் வழங்கப்பட்டது.

Advertising
Advertising

 கரூர் காந்தி கிராமம் விஎன்சி கேஸ் ஸ்டேஷனில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, முதன்மை டிவிஷனல் ரீடெய்ல் சேல்ஸ் மேலாளர் சிவகுமார், விஎன்சி நிர்வாக இயக்குனர் பாஸ்கர், மாலதி பாஸ்கர், சீனியர் மேலாளர் அப்பாயண்டியராஜன் ஆகியோர் பொன்னுசாமியிடம் சாவியை வழங்கினர். கரூர் உதவி மேலாளர் மனுமோகன் நன்றிகூறினார். முன்னாள் எம்எல்ஏ மலையப்பசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகள் சிவகுமார், அப்பாண்டியராஜன் கூறுகையில், ‘இத்திட்டத்தில் மொத்தம் 45 மினி டிரக் வழங்கப்படும். டிசம்பர் 8ம் தேதி வரை ஒவ்வொரு மாதமும் ஒரு டாடா அல்ட்ரா டிரக் என 3 டிரக் வழங்கப்படுகிறது. இதுதவிர 10,000 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ₹1000 மதிப்புள்ள இலவச டீசல் வவுச்சர் எக்ஸ்ட்ரா பவர் விர்ச்சுவல் கார்டு மூலமாக வழங்கப்படும். எனவே, 50 லிட்டர் டீசல் அடித்து பில்லுடன், எஸ்எம்எஸ் அனுப்பி திட்டத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம்,’ என்றனர்.

Related Stories: