திண்டுக்கல்லில் சத்துணவு ஊழியர் சங்க மாநாடு

திண்டுக்கல், அக். 18: திண்டுக்கல்லில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான போராட்ட ஆயத்த மாநாடு நேற்று நடைபெற்றது. துணை தலைவர்கள் வனிதா தலைமை வகிக்க, மணிக்காளை வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் மங்களபாண்டியன் துவக்கவுரையாற்றினார். மாவட்ட செயலாளர் வேலுச்சாமி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் சுகந்தி வாழ்த்துரை வழங்கினார். ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் வீரகடம்பு கோபு சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் முபாரக் அலி நிறைவுரையாற்றினார். மாநாட்டில் அக்.23ம் தேதி ஒன்றிய அளவில் பிரசார விளக்க கூட்டம். நவ.12ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் முதல்வரின் கவன ஈர்ப்பு பேரணி, நவ. 26ம் தேதி முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாவட்ட தலைநகரங்களில் மறியல், டிச.26ம் தேதி மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்கும் காலவரையற்ற தொடர் போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  பொருளாளர் ராசு நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: