ஊராட்சி பள்ளியில் உணவு தினம்

தொண்டி, அக்.17:  தொண்டி அருகே தினைக்காத்தான்வயல் அரசு பள்ளியில் உணவு தினம் கொண்டாடப்பட்டது. அக்.16ம் தேதி உலக உணவு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து உணவின் சுவை மற்றும் தேவை குறித்து மாணவர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக பலவகையான உணவுகள் கொண்டு தொண்டி அருகே உள்ள தினைக்காத்தான்வயல் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் உணவு தினம் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை லதா தலைமை தாங்கினார். மாணவர்களிடம் உணவின் தேவை குறித்தும், உற்பத்தி குறித்தும், பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துகளை ஆசிரியர்கள் விளக்கினர். மேலும் பல்சுவை உணவுகள் சமைக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. இனிப்பு முதல் காரம் வரையிலும் ஒவ்வொரு மாணவர்களும் சுவைத்தனர். மேலும் மாணவர்களிடம் உணவு குறிததும் பேச்சு போட்டி நடைபெற்றது. ஆசிரியர் தனலெட்சுமி, பள்ளி மேலாண்மை குழு தலைவி வனிதா உட்பட பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: