ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்தகோரி தொமுச ஆர்ப்பாட்டம்

கும்பகோணம், அக். 16: ஊதிய ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடத்தாமல் காலம்தாழ்த்தும் தமிழக அரசை கண்டித்து கும்பகோணத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன் தொமுச சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மத்திய சங்க தலைவர் சரவணன் தலைமை வகித்தார். பொருளாளர் நெடுஞ்செழியன், துணை பொது செயலாளர் வைத்தியநாதன் முன்னிலை வகித்தனர். மத்திய சங்க பொது செயலாளர் பாண்டியன் கண்டன உரையாற்றினார்.ஆர்ப்பாட்டத்தில் 1.9.2019 முதல் நடைமுறைக்கு வர வேண்டிய ஊதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் காலம்கடத்தும் தமிழக அரசு நிர்வாகத்தை கண்டித்தும், முந்தைய ஒப்பந்தங்களில் ஏற்று கொள்ளப்பட்டு நிறைவேற்றப்படாத ஒப்பந்தங்களை நிறைவேற்ற வலியுறுத்த கோஷங்கள் எழுப்பினர். நிர்வாக பணியாளர் சங்க தலைவர் செல்வகுமார். பொது செயலாளர் சுகுமார், துணை பொது செயலாளர் சந்திரசேகரன், துணை தலைவர்கள் மோகன், இடும்பன்சாமி, இளமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertising
Advertising

Related Stories: