ஜலகண்டாபுரம் அருகே சாக்கடை கால்வாய் வசதியின்றி குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவுநீர்

ஜலகண்டாபுரம், அக்.16: ஜலகண்டாபுரம் அருகே சாக்கடை கால்வாய் வசதி இல்லாததால் குடியிருப்பு பகுதிகளில் கழிவுநீர் தேங்கி வருகிறது. இதனால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடு அபாயம் ஏற்பட்டுள்ளதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.

ஜலகண்டாபுரம் அருகே ஆவடத்தூர் கிராமம், சவுரியூர் 7வது வார்டு ரைஸ்மில் ரோடு பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் செல்வதற்கு கடந்தபல ஆண்டுகளுக்கு முன் அமைக்கபட்ட கழிவுநீர் கால்வாய்காலப்போக்கில் சிதிலமடைந்து தரைமட்டமானது.இதனால் தற்போது கழிவுநீர் செல்வதற்கு போதியவடிகால் வசதிஇல்லாததால் அவை குடியிருப்புகளின் முன் குட்டைபோல் தேங்கி வருகிறது.இதனால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவுவதுடன் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தற்போது டெங்கு காய்ச்சல் பரவிவரும் வேளையில் வீடுகளின் முன் தேங்கியுள்ள கழிவுநீரில் கொசுக்கள் உற்பத்தியாகிஅப்பகுதிமக்கள்காய்ச்சல் உள்ளிட்டபல்வேறுஉடல் உபாதைகளுக்கு ஆளாகி உள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் கழிவுநீர் தேங்காத வகையில் கால்வாய் வசதி ஏற்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: