களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கல்

பெரம்பலூர்,அக்.15:களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவியருக்குக் கண்ணாடிகள் வழங்கப் பட்டது. தமிழக முதல்வரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், பெரம்பலூர் மாவட்டம், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் நேற்று (14ம் தேதி) திங்கட்கிழமை காலை மாணவ,மாணவிகளுக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது. அம்மாப் பாளையம் வட்டாரக் கண் மருத்துவர் செந்தில்நாதன் பள்ளி மாணவ மாணவியருக்குக் கண் பரிசோதனை செய்ததன் பேரில், களரம்பட்டி அரசு ஆதிதிராவிடர் நலமேல்நிலைப் பள்ளி யின் தலைமைஆசிரியர் சுப்பிரமணியன் நேற்று முதல் கட்டமாகத் தேர்வு செய்யப்பட்ட 21 மாணவ, மாணவியருக்கு மூக்குக்கண்ணாடிகளை வழங்கினார்.சாரணிய ஆசிரியை ரேவதி, கண்ணொளித் திட்ட பொறுப்பாசிரியர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரம்பலூர் மாவட்ட ஜேஆர்சி இணைக் கன்வீனர் மாயக் கிருஷ்ணன் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்தினார்.

Related Stories: