இடைப்பாடியில் இந்து மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

இடைப்பாடி, அக்.10:இடைப்பாடி பஸ் நிலையத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் சேலம் மாவட்ட அமைப்பாளர் முருகன் தலைமை வகித்தார். அமைப்பு குழு தலைவர் பொன்னுசாமி, செய்தி தொடர்பாளர் ஹரிஹரன், நகர தலைவர் வைத்தியநாதன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில், கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேசுகையில், ‘தமிழகத்தில் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.குத்தகை மற்றும் வாடகைதாரர்கள் கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை அறநிலையத்துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் ஒத்துழைப்போடு ஆவணங்களை தயார் செய்து அபகரித்துள்ளனர். இதை அரசு கண்காணித்து மீட்க வேண்டும்,’ என்றார்.

Advertising
Advertising

Related Stories: