பெல் ஐஎன்டியூசி அலுவலகத்தில் காந்தி பிறந்தநாள் கருத்தரங்கு

திருவெறும்பூர், அக்.10: திருவெறும்பூர் அருகே பெல் ஐஎன்டியுசி தொழிற்சங்க அலுவலகத்தில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்திஜியின் பிறந்தநாள் விழா மற்றும் புகைப்பட கண்காட்சியும், கருத்தரங்கு நேற்று நடந்தது. கூட்டத்திற்கு திருச்சி தெற்கு மாவட்ட தலைவர் கோவிந்தராஜன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜலிங்கம், கல்யாண்குமார், சக்தி நாகலிங்கம், நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு விருந்தினராக திருக்குறள் முருகானந்தம், பேச்சாளர் நிஜாம் வீரப்பா ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் காந்தியின் தாய், தந்தை மற்றும் காந்தியின் குழந்தை, வாலிப, இளமை, முதுமை உள்ளிட்ட பல்வேறு பருவ நிலைகளை உணர்த்தும் வகையில் அவரது புகைப்படங்கள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தது. விழாவில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.  முன்னதாக நிர்வாகி செந்தில்குமார் வரவேற்றார். வட்டார தலைவர் ரவிக்குமார் நன்றி கூறினார்.

Advertising
Advertising

Related Stories: