பொன்மலைபட்டியில் ஒரு மாதமாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் மாநகராட்சி அலட்சியம்

திருச்சி, அக்.10: பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெருவில் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு ஒரு மாதமாக குடிநீர் வீணாகிறது. திருச்சி பொன்மலைப்பட்டி கீழ உடையார் தெரு பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதி மக்கள் பயன்பாட்டுக்காக காவிரி குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. அந்த குழாய் பதிக்கப்பட்டிருக்கும் தெருவில் கடந்த ஒரு வருடமாக பல இடங்களில் குழாய் உடைந்து தண்ணீர் வெளியேறி வருகிறது. இது குறித்து அப்பகுதியினர் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

Advertising
Advertising

இந்நிலையில் கீழ உடையார்தெருவில் கடந்த ஒரு மாதமாக காவிரி குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாகி வருகிறது. இதனால் அந்த பகுதியில் வாகனத்தில் செல்வோரும், நடந்து செல்வோரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே குடிநீர் விரயமாவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: