ஜங்ஷன் நான்கு வழி மேம்பாலத்தில் முடிக்காமல் உள்ள மன்னார்புரம் வழித்தடத்தை கட்டிமுடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் ஓய்வு அரசு ஊழியர் சங்கம் வலியுறுத்தல்

திருச்சி, அக்.10: திருச்சி ஜங்ஷன் நான்கு வழி மேம்பாலத்தில் முடிக்கப்படாமல் உள்ள மன்னார்புரம் வழித்தடத்தை விரைவில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும் என்று ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் திருச்சி ஜங்ஷன் நான்கு வழி மேம்பாலம் கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இன்னும் முழுமையாக கட்டி முடிக்கப்படவில்லை. 3 வழித்தடங்கள் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மன்னார்புரம் செல்லும் வழித்தடம் இன்னும் கட்டி முடிக்கப்படாமல் உள்ளது. இதனால் பல்வேறு விபத்துக்கள் நடைபெறுகிறது. எனவே விரைவில் மேம்பாலத்தை கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விடவேண்டும்.

திருச்சி மாநகராட்சி இதுவரை இருந்து வந்த வீட்டுவரியை மாநகர ஆணையர் பல மடங்கு உயர்த்தி ஆணையிட்டுள்ளார். இது பொது மக்களை மிகவும் பாதிப்பதால், இந்த வரிவிதிப்பை மறுபரிசீனை செய்து குறைத்திட வேண்டும். அனைத்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கும் 21 மாதங்களுக்கான 7வது ஊதியக்குழு நிலுவைத் தொகையை விரைவில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் மாவட்ட தலைவர் அருள்ஜோஸ், செயலாளர் ஆர்தர்காட்வின், பொருளாளர் சந்திரசேகரன், இணைச் செயலாளர் ெஜகநாதன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: