12ல் ரேஷன் குறைதீர் கூட்டம் 11 தாலுகாக்களில் நடக்கிறது

திருச்சி, அக்.10: திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களிலும் பொதுவிநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைய ரேஷன் குறைதீர் கூட்டம் வரும் 12ம் தேதி நடைபெற உள்ளது. பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கும், மக்களின் குறைகளைக் கேட்டு உடனுக்குடன் அவற்றை நிவர்த்தி செய்யவும், உணவுப்பொருள் வழங்கல் தொடர்பான பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் மாதந்தோறும் நடத்த உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருச்சி மாவட்டத்தில் வரும் 12ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ரேஷன் குறைதீர் கூட்டம் நடக்கிறது.

Advertising
Advertising

திருச்சி கிழக்கு தாலுகாவில் செங்குளம்காலனி ரேஷன் கடையில் திருச்சி கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் தலைமையிலும், திருச்சி மேற்கு புத்தூர் ரேஷன் கடையில் ஆர்டிஓ, ரங்கம் மலைப்பட்டி ரேஷன் கடையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலர், மணப்பாறை ஆவாரம்பட்டி கடையில் ரங்கம் சப்.கலெக்டர், மருங்காபுரி மல்லிகைப்பட்டி கடையில் துணைப்பதிவாளர், லால்குடி புள்ளம்பாடி கடையில் ஆர்டிஓ, மண்ணச்சநல்லூர் திருவாசி கடையில் மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், முசிறி சொரியம்பட்டி கடையில் ஆர்டிஓ, துறையூர் கொப்பம்பட்டி கடையில் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலர் தலைமையிலும், தொட்டியம் கூன்ரங்கம்பட்டி கடையில் சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை கலெக்டர், திருவெறும்பூர் பூலாங்குடி-2 கடையில் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் ஆகியோர் தலைமையில் நடக்கிறது.தொடர்புடைய ரேஷன் கடைகளில் குறைபாடுகளை மேற்காணும் கூட்டங்களில் கலந்து கொண்டு தெரிவிக்கலாம் என திருச்சி கலெக்டர் சிவராசு தெரிவித்துள்ளார்.

Related Stories: