பிரதம கவுரவ நிதி திட்டத்தில் வங்கி கணக்கில் பணம் ஏறாத விவசாயிகளுக்கு அழைப்பு

கும்பகோணம், அக். 10: பிரதம கவுரவ நிதி திட்டத்தில் திருப்பனந்தாள் வட்டாரத்தில் வங்கி கணக்கில் பணம் ஏறாத விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளா ண்மை உதவி இயக்குனர் பாலசரஸ்வதி வெளியிட்டு ள்ள செய்திக்குறிப்பு: கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் வட்டாரத்தில் பிரதமரின் விவசாயிகள் கவுரவ நிதி திட்டத்தின்கீழ் இதுவரை தொகை வங்கி கணக்கில் ஏறாத விவசாயிகள், தங்களுடைய ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகத்துடன் திருப்பனந்தாள் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்துக்கு வந்து உடன் சரி செய்து கொள்ள வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ.6,000 அவர்களது வங்கி கணக்கில் மத்திய அரசு மூலம் வரவு வைக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் உடன் உங்களது பெயர், ஆதார் எண், வங்கி பெயர் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதா என சரி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

Related Stories: