கண்டியூர் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு சுகாதார பணி

திருவையாறு, அக். 10: கண்டியூர் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு சுகாதார பணி நடந்தது. இதில் 6 இடங்களில் ரூ.8,200 அபராதம் விதிக்கப்பட்டது.

திருவையாறு அடுத்த கண்டியூர் ஊராட்சியில் டெங்கு ஒழிப்பு மற்றும் ஒட்டுமொத்த சுகாதார பணி நடந்தது. கண்டியூர் மெயின்ரோடு, ரஹீம் நகர், அவிதா நகர், திருக்காட்டுப்பள்ளி மெயின்ரோடு, வடக்குத்தெரு, திருவையாறு மெயின்ரோடு, சுண்ணாம்புகார தெரு, வாணிய தெரு, அமிர்தா நகரில் பொது சுகாதார துணை இயக்குனர் ரவீந்திரன், மலரேியா மாவட்ட அலுவலர் போத்திப்பிள்ளை, பூச்சியியல் வல்லுனர் மாயவன், திருவையாறு தாசில்தார் இளம்மாருதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன், சுஜாதா, வட்டார மருத்துவ அலுவலர் கார்த்திகேயன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், துணை தாசில்தார்கள், சுகாதார ஆய்வாளர்கள், மஸ்தூர்கள் பங்கேற்று டெங்கு ஒழிப்பு மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டனர்.
Advertising
Advertising

டெங்கு ஒழிப்பு பணியின்போது டெங்கு ஆதாரம் காணப்பட்ட திருக்காட்டுப்பள்ளி மெயின்ரோடு, திருவையாறு மெயின்ரோடு, ரஹீம் நகரில் 6 இடங்களில் ரூ.8,200 அபராதம் விதிக்கப்பட்டது. ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்திய கடைக்கு ரூ.500 அபராதம் வசூல் செய்யப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு ஆட்டோ விளம்பரம் செய்யப்பட்டது. அனைத்து அரசு கட்டிடங்களில் மேல்தளம் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் தூய்மை செய்யப்பட்டது.

Related Stories: