பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் கலெக்டரிடம் மனு

தஞ்சை, அக். 10: தஞ்சை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீட்டுத்தொகை முழுமையாக வழங்காவிட்டால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சை மாவட்டத்துக்கு 2018- 19ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகை ரூ.270 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்டு முழுவதுமாக அழிந்துள்ளது. இந்நிலையில் பயிர் காப்பீட்டுத்தொகை விவசாயிகள் பெரும்பாலானோருக்கு வழங்கவில்லை. மேலும் ஏக்கருக்கு ரூ.28 ஆயிரம் வழங்க வேண்டிய நிலையில் பல பகுதிகளில் 5000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. மேலும் பல விவசாயிகளுக்கு இந்த தொகை வழங்கப்படாமல் உள்ளது.

இந்நிலையில் குற்றம் சாட்டிய விவசாயிகள் 100க்கும் மேற்பட்டோர் இதை முறையிட தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த விவசாயிகளை கோஷம் போட விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் காவல்துறையினர் அவர்களை வெளியேற்றியதால் ஆத்திரமடைந்த விவசாயிகள் உடனடியாக தங்களுக்கு உரிய நிவாரணம் வழங்காத பட்சத்தில் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

Related Stories: