மாணவர்கள் தபால் நிலைய பணிகளை பார்வையிட்டனர் வேலூரில் தேசிய தபால் வார விழாவையொட்டி

வேலூர், அக்.10:வேலூரில் தேசிய தபால் வார விழாவையொட்டி மாணவர்கள் தபால் நிலைய பணிகளை நேற்று பார்வையிட்டனர்.நாடு முழுவதும் தேசிய தபால் வார விழா ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, வேலூர் கோட்ட தலைமை தபால் நிலையத்தில் தேசிய தபால் வார விழா நேற்று தொடங்கி வரும் 15ம் தேதி வரையில் ஒரு வாரத்திற்கு கொண்டாடப்படுகிறது. தபால் வார விழாவிற்கு வேலூர் தலைமை தபால் நிலைய கண்காணிப்பாளர் கோமல்குமார் தலைமை தாங்கினார்.

தபால்துறை அலுவலர் செல்வகுமார் முன்னிலை வகித்தார். வார விழாவில் முதல் நாளான நேற்று உலக தபால் தினத்தையொட்டி, தபால் துறையில் நடைபெறும் பணிகளை பார்வையிட வேலூர் தலைமை தபால் நிலையத்திற்கு வந்திருந்த பள்ளி மாணவர்களுக்கு தபால் துறையில் நடைபெறும் பணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த தபால்துறை வார விழாவில் வாடிக்கையாளர்களின் குறைகள், தபால் சேவைகள் குறித்த நிகழ்வுகள் வரும் 15ம் தேதி வரை நடைபெறுகிறது.

Related Stories:

>