இடைத்தேர்தலில் திமுக கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம் ஜவாஹிருல்லா பேட்டி

பரமக்குடி, அக்.4:  மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்டு 25 ஆண்டு வெள்ளி விழாவினை முன்னிட்டு பரமக்குடிக்கு மமக நிறுவனர் ஜவாஹிருல்லா வந்தார். அவர், 10 இடங்களில் கட்சி கொடியினை ஏற்றி வைத்த பின்னர் கூறுகையில், தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி மற்றும் புதுவையில் காமராஜர் நகர் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்காக பாடுபடுவோம். அதிமுக ஆட்சி தமிழக மக்களின் நலன்களை மத்திய அரசுக்கு காவு கொடுக்கும் ஆட்சியாக உள்ளது.

முதலமைச்சர் எடப்பாடி ஆட்சியின் மீது தமிழக மக்களுக்கு கடுமையான கோபம் உள்ளது. எம்பி தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்றது போல், இடைத்தேர்தலிலும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறுவார்கள். மத்திய அரசு, தேசிய மீன்வள சட்ட மசோதாவை கொண்டு வரவுள்ளது. இந்த

சட்டத்தில் பாரம்பரிய மீனவர்களுக்கு எதிரான ஏராளமான அம்சங்கள் இடம் பெற்றிருக்கிறது. இரண்டு கோடி மீனவர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா அமைந்திருக்கிறது. இந்த மசோதா கார்ப்பரேட் நிறுவனங்கள் மீன்பிடி தொழிலில் இறங்குவதற்கு ஏராளமான சலுகைகளை வழங்கியுள்ளது. மத்திய அரசின் பல்வேறு அறிவிப்புகளுக்கு எதிராக திமுக போராட்டம் அறிவித்து வருகிறது. போராட்டங்களை அறிவிக்கும்போது மத்திய அரசு பணிந்து வரும் நிலைஏற்பட்டுள்ளது என்றார்.

Related Stories: