கும்மிடிப்பூண்டியில் 400 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

கும்மிடிப்பூண்டி, அக். 2: சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில், கர்ப்பிணிகளுக்கான சமுதாய வளைகாப்பு கும்மிடிப்பூண்டியில் கே.எஸ்.விஜயகுமார் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.  இதில், மாவட்ட திட்ட அலுவலர் ராஜேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர் சாமிநாதன், ஈகுவார்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் பிரபாவதி, குழந்தை வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் எழிலரசன், வட்டார திட்ட  உதவியாளர் லில்லிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தோஷ் மேரி வரவேற்றார்.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் கோவிந்தராஜ் பேசும்போது, “கர்ப்பிணி பெண்கள் பேறுகாலம்வரை எவ்வித மனசோர்வு, கவலை, கோபம் கொள்ளாமல் மகிழ்ச்சியுடன் இருக்கவேண்டும். மருத்துவர்களின் ஆலோசனைக்கு ஏற்ப பரிசோதனை  செய்யவேண்டும்” என்றார். இதையடுத்து, தாய்சேய் நல உறுதிமொழி மற்றும் தேசிய ஊட்டச்சத்து மாத உறுதிமொழியை கர்ப்பிணிகள் எடுத்துக்கொண்டனர். பின்னர் 400 கர்ப்பிணிகளுக்கு சீர்வரிசை பொருட்களுடன் வளைகாப்பு நடத்தப்பட்டது. இறுதியில் வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் வனிதாதேவி நன்றி கூறினார்.

Related Stories: