ஏடிஎம் ெமஷின் ரிப்பேர் ஒரு மாதமாக மக்கள் அவதி

தேவகோட்டை, அக்.1: தேவகோட்டை தாலுகா சருகணி கிராமமானது நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு ஜங்ஷன் பகுதியாகும். அன்றாடம் பல்வேறு கிராம பகுதிகளில் இருந்து மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி பழங்கள் என அனைத்தும் வாங்குவதற்கு சருகணியை நோக்கி வருவர். இவர்களது வசதிக்காக சருகணியில் இந்தியன் வங்கி இருக்கிறது. இங்குள்ள ஏ.டி.எம். ெமஷின் பழுதடைந்துவிட்டது. செயல்பட்டு பல மாதங்களாகிறது. கிராம மக்கள் தினமும் ஏ.டி.எம். ெமஷினிற்கு சென்று ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இது குறித்து வங்கியில் மக்கள் பல முறை வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இது குறித்து சமூக ஆர்வலர் ஆரோக்கியம் கூறுகையில், கடந்த ஒரு மாத காலமாக ஏடிஎம் பழுதாக கிடக்கிறது. கிராம மக்கள் வங்கி நேரம் தவிர மற்ற நேரங்களில் அவசர தேவைகளுக்கு மருத்துவமனை செல்ல, வெளியூர் பயணங்கள் செல்வதற்கு, அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு வங்கியில் போட்டிருக்கும் பணத்தை எடுக்க சென்று ெமஷின் ரிப்பேர் என ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர். பல முறை சம்பந்தப்பட்டவர்களிடம் வங்கியில் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கை எடுத்த பாடில்லை. இனி வரும் காலங்களிலாவது செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: