முற்றுகை புதரில் மறைந்திருந்து படம் பிடித்த போது சிக்கினர் கன்னியாகுமரியில் பிடிபட்ட 2 பேர் தீவிரவாதிகளா? போலீஸார் தீவிர விசாரணை

கன்னியாகுமரி, அக்.1: கன்னியாகுமரியில் கடந்த 24ம் தேதி ெதாடங்கி 8 நாட்கள் ஆர்எஸ்எஸ் ெதாண்டர்களுக்கான பண்பு பயிற்சி முகாம் நடந்து வருகிறது. இந்த முகாம் இன்றுடன் நிறைவடைகிறது. முகாமில் பல்வேறு பகுதிகளில் இருந்து 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று வருகின்றனர். மேலும் உழவார பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில் பாபநாச தீர்த்தக்குளம் மற்றும் அரசு மருத்துவமனையில் தூய்மை மற்றும் உழவார பணிகளில் ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் ஈடுபட்டனர். இதை மர்ம நபர்கள் மறைந்திருந்து கண்காணித்ததாக அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து கன்னியாகுமரி காவல் நிலையத்திலும் புகார் தெரிவிக்கப்பட்டது.இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு பயிற்சி முகாம் நடந்து கொண்டிருந்தது. அப்போது 2 இடங்களில் முட்புதர்கள் அசைந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் முட்புதர்களில் ஒளிந்திருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் என தெரியவந்தது.

அவர்களது செல்போன்களை சோதனையிட்ட போது, கன்னியாகுமரி பகவதி அம்மன் ேகாயில், குகநாதீஸ்வரர் கோயில், கூடங்குளம் பகுதி உள்ளிட்ட இடங்கள் மற்றும் ஆர்எஸ்எஸ் உழவார பணி போன்றவற்றை பல கோணங்களில் வீடியோ எடுத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். இதைத்தொடர்ந்து கன்னியாகுமரி டிஎஸ்பி பாஸ்கரன் தலைமையிலான ேபாலீசார் அந்த வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசி வருகின்றனர். போலீசார் அவர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் மத்திய புலனாய்வு அமைப்பும் அவர்களிடம் விசாரித்து வருகிறது.பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ள நிலையில், கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பயிற்சி முகாமை மறைந்திருந்து கண்காணித்ததோடு, பல முக்கிய பகுதிகளை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் தீவிரவாதிகளாக இருக்குமோ என்ற சந்தேகமும் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories: