பண்ருட்டி நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணிகள்

பண்ருட்டி, செப். 26: பண்ருட்டி நகராட்சி பகுதியில் பருவ மழையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் தற்போது தூர்வாரும் பணிகள் நடந்து வருகிறது. இதில் விழமங்கலம் பகுதியிலிருந்து வரும் வாலாஜா வாய்க்கால் திருவதிகை பகுதியை அடைகிறது. பெரும்பாலான வார்டு பகுதிகளின் கழிவுநீர் மற்றும் மழைநீர் செல்லும் முக்கிய வாய்க்காலாகும். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் தூர்வாரும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

 

நகராட்சி மண்டல மழை மீட்பு குழு அலுவலர் ஞானவேல் தலைமையில் நேற்று நவீன இயந்திரம் மூலம் புதர் மண்டிகிடந்த வாய்க்கால்களில் தூர்வாரும் பணியை துவக்கி வைத்து வாய்க்கால் செல்லும் இடங்களில் நடந்து சென்று பார்த்து சேதப்பகுதிகளை ஆய்வு செய்தார். அவ்வாறு சேதமான இடங்களை உடனடியாக சரி செய்து தண்ணீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என கூறினார். மேலும் தூர்வாரப்படும் வாய்க்காலை அந்தந்தபகுதி பொதுமக்கள் சேதப்படுத்தகூடாது என்றும் அறிவுரை வழங்கினார். அப்போது நகராட்சி ஆணையர் செல்வபாலாஜி, பொறியாளர் நாகராஜன், துப்புரவு அலுவலர் சக்திவேல், பணி ஆய்வாளர் சாம்பசிவம், மேற்பார்வையாளர் சரவணன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Related Stories: