சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை திருப்பி தரக்கோரி 9 கிராம மக்கள் கலெக்டர் அலுவலகம் முற்றுகை

பெரம்பலூர்,செப்.24:சிறப்புப் பொருளாதாரம் அமைக் காததால் அதற்காகக் கொடுத்த நிலங்களை திருப்பித்தர வலியுறுத்தி, 9 கிராமப் பொதுமக்கள் பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடைபெற்றது. அப் போது பெரம்பலூர் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு நிலம் அளித்த உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக, திருமாந்துறை, கீரனூர், லப்பைகுடிகாடு, பென்னகொணம், பெருமத்தூர், பெ.நல்லூர், மிளகா நத்தம், எறையூர், அயன்பேரையூர் என 9கிராமங்களைச்சேர்ந்த பொதுமக்கள் 100க்கு மேற்பட்டோர் திரண்டு வந்து பெரம்பலூர் கலெக் டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவ ர்கள் கலெக்டர் சாந்தாவி டம் அளித்துள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்தி ருப்பதாவது :எங்களுக்குச் சொந்தமான நிலத்தை 12ஆண்டுகளுக்கு முன்பு சிறப்புப் பொரு ளாதார மண்டலம் அமைப் பதற்காக ஜிவிகே நிறுவ னத்திற்காக, அன்றைய அரசாங்கத்தால், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நிலம் கையகப்படுத்தப்பட்டு எங் களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அதன்படி சிறப்பு பொருளாதார மண் டலம் அமைப்பதற்காக நிலத்தை கொடுத்ததால் வீட் டுக்கு ஒருவருக்கு வேலை வாய்ப்பு, வீட்டுமனை ஒன் று தருவதாக மோசடியாக ஒப்பந்தம் செய்யப்பட்டது.

அதனை நம்பி தங்களது நிலத்தை ஜிவிகே நிறு வனத்திற்கு பத்திரமாக எழுதி கொடுத்து விட்டோம்.ஆனால் ஒப்பந்தப்படி 12 ஆண்டுகளாகியும் வேலை வாய்ப்பு வழங்கப்படவில் லை. வீட்டுமனை தரப்பட வில்லை. முக்கியமாக சிற ப்புப் பொருளாதார மண்ட லம் அமைப்பதற்கான சிறு பணிகள் கூட தொடங்கப்ப டவில்லை. இதனால் எங்க ளது பிள்ளைகள் வேலை வாய்ப்பின்றி பஞ்சம் பிழை க்க வேலைவாய்ப்புக்காக வெளியூர் சென்று அலை ந்து வருகின்றனர். இந்த ஒப்பந்தத்தால் எங்களது வாழ்வாதாரத்தையும் எங் களது பிள்ளைகளின் எதி ர்காலத்தையும் ஒட்டுமொ த்தமாக இழந்துவிட்டோம்.எனவே மிகுந்த மனவேத னையுடன் உள்ள எங்களு க்கு எங்களது வாழ்வாதா ரத்தையும் வேலைவாய்ப் பையும் வீட்டு மனைகளை யும் ஒப்பந்தப்படி திருப்பி வழங்குமாறு கேட்டுக்கொ ள்கிறோம் என அந்தக் கோ ரிக்கை மனுவில் தெரிவித் துள்ளனர். மனு க்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் சாந்தா, உங்களது கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்தி ற்கு கொண்டு செல்கிறேன் என உறுதிபடதெரிவித்தார் இதனைதொடர்ந்து அனை வரும் அங்கிருந்துக் கலை ந்து சென்றனர்.

Related Stories: