பிச்சம்பட்டியில் பல கிமீ தூரம் சென்று குடிநீர் பிடித்து வரும் அவல நிலை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு

கரூர், செப். 24: தாந்தோணி ஒன்றியம் பிச்சம்பட்டியில் பல கிமீ தூரம் சென்று குடிநீர் பிடித்து வரும் அவல நிலை உள்ளது என கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள் விவரம்:தாந்தோணி ஒன்றியம் பிச்சம்பட்டி கிராம மக்கள் அளித்த மனு:பிச்சம்பட்டி கிராமத்தில் கடந்த சில வாரங்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதனால் பல கிமீ தூரம் சென்று குடிநீர் பிடித்து வருகிறோம். சின்டெக்ஸ் தொட்டியும் பழுதடைந்து சேதமாக இருக்கிறது. இதனால் உப்புத் தண்ணீரும் கிடைக்கவில்லை. உடனடியாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர். ராயனூர் பகுதி மக்கள்அளித்த மனுவில், ராயனூர் பகுதி கரூர் நகராட்சி 40வது வார்டு பகுதியில் முறையாக தண்ணீர் வருவதில்லை. குடிநீர் கோரி கடந்த 22ம் தேதி பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சாலை மறியல் செய்தோம். அப்போது அதிகாரிகள் வந்தனர். உடனடியாக அரைமணி நேரம் மட்டும் தற்காலிகமாக தண்ணீர் விநியோகம் செய்தனர்.இனி வரும் நாட்களில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யவேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories: