தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர மருத்துவரை நியமிக்க கோரிக்கை

தொண்டி, செப். 20: தொண்டி பேருராட்சியில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது இரவு நேரத்தில் டாக்டர்கள் இருப்பது இல்லை. அதிகாரிகள் பொது மக்கள் நலன் கருதி இரவு பணிக்கு நிரந்தர டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொண்டி பேருராட்சியில் 15 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தொண்டியை மையமாக வைதத்து 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

இப்பகுதி மக்கள் முற்றிலமாக விவசாயத்தை நம்பி இருப்பதாலும் பெரும்பாலும் நடுத்தர வர்க்கத்தினராகவே உள்ளனர். அனைவரும் இந்த மருத்துவமனையையே நாடி வருகின்றனர். ஆனால் இங்கு போதிய மருத்துவர்கள் கிடையாது.

கிழக்கு கடற்கரை சாலையில் ஏற்படும் விபத்துகள் அனைத்தும் இங்கு முதலுதவி மட்டுமே அளிக்கப்படுகிறது. இரவு நேரத்தில் செவிலியர்களே முதலுதவி அளித்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். உள் நோயாளிகள், புற நோயாளிகள் என அதிகம் பேர் உள்ள மருத்துவமனையில் இரவு நேரத்தில் டாக்டர்கள் இல்லாதது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது.

மாவட்ட நிர்வாகம் இதை கவனத்தில் கொண்டு இரவு நேரத்தில் டாக்டர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டியைச் சேர்ந்த சுலைமான் கூறுகையில், ‘தொண்டி பேரூராடச்சியில் அதிக மக்கள் தொகை உள்ளது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் நெஞ்சுவலி உள்ளிட்ட உயிர் பலி நோய்கள் வந்தால் பார்க்கும் வசதி கிடையாது. கிழக்கு கடற்கரை சாலையில் அதிகமான விபத்து இப்பகுதியில்தான் நடக்கிறது. ஆனால் சிகிச்சை அளிக்க முடியாமல் ராமநாதபுரம் கொண்டு செல்கின்றனர். இதனால் உயிர் பலியும் ஏற்படுகிறது. அதனால் இம் மருத்துவமனையில் அரவு நேரத்தில் டாக்டர்க்ள நியமிக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: