வையம்பட்டி பகுதியில் 100% மானியத்தில் மானாவாரி நிலங்களில் பனைவிதை நடவு துவக்கம்

மணப்பாறை, செப்.20: வையம்பட்டி பகுதியில் மானாவாரி நிலங்களில் கூடுதல் வருவாய் பெற 100 சதவீத மானியத்தில் பனைமரம் நடவு செய்யும் பணி தொடங்கியது.திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த வையம்பட்டி வட்டாரத்தில் மானாவாரி நில மேம்பாட்டுத்திட்டம் எளமனம், புதுக்கோட்டை குமாரவாடி, நடுப்பட்டி மற்றும் வையம்பட்டிக்கு உட்பட்ட ஆயிரம் எக்டேர் பரப்பில் நடப்பாண்டில் செயல்படுத்தப்படுகிறது.இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக நடப்பாண்டில் சிறப்பு திட்டமாக மானாவாரி நிலங்களில் கூடுதல் வருவாய் பெற 100 சதவீத மானியத்தில் ஏக்கர் ஒன்றுக்கு 50 பனை மரங்கள் நடுவதற்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு, பனைமர விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  நேற்று எளமணம் மற்றும் புதுக்கோட்டை உட்பட்ட கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு பனை மர விதைகள் வழங்கப்பட்டு மானாவாரி நிலங்களில் காலி இடங்கள், வரப்பு ஓரங்களில் நடவு செய்யும் பணிகள் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ரங்கசாமி மற்றும் வேளாண்மை கல்லூரி பேராசிரியர் மாரிமுத்து மற்றும் விவசாயிகள் பெண்கள் மற்றும் பள்ளி மாணவர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்கள் முன்னிலையில் நடவு செய்யப்பட்டது.மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த மானாவாரி விவசாயிகள் வேளாண்மை உதவி அலுவலர்களை அணுகி பனை மர விதைகள் முழு மானியத்தில் பெற்று பயனைடையுமாறு வையம்பட்டி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரெங்கராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Related Stories: