கன்னியாகுமரி, செப்.20: குமரி மாவட்டம் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் மீன்பிடித்து வருகின்றனர். அதிகாலை 5 மணிக்கு சென்று இரவு 9 மணிக்கு கரை திருப்ப வேண்டும் என்பது விதிமுறையாகும். இந்த விதிமுறையை தளர்த்தவேண்டும் என்று தொடர்ந்து அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் குமரி மாவட்டம் வந்த பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, கன்னியாகுமரி அதிமுக பேரூர் செயலாளர் வின்ஸ்டன் தலைமையில் சின்னமுட்டம் துறைமுகம் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க தலைவர் வானவில் சகாயம் உட்பட நிர்வாகிகள் சந்தித்து இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.இரவில் தங்கி மீன்பிடிக்க அனுமதி அளித்தால், ஆழ்கடலில் சட்டம் ஒழுங்கு பிரச்னை உருவாகும் என்றும், சின்னமுட்டம் விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இரவில் தங்கி மீன் பிடிக்கும் நடைமுறை இல்லை என்றும் கலெக்டர் பிரசாந்த் வடநேரே, எஸ்.பி. நாத் ஆகியோர் தெரிவித்தனர்.